↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
யு டியூபில் சுவாசிகா படத்துக்கு தடை

யு டியூபில் வெளியான சுவாசிகா படம் தடை செய்யப்பட்டது.கோரிப்பாளையம், மைதானம், சேட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் சுவாசிகா. இவர் மலையாளத்தில் நடித்த படம் ‘பிரபுவின்டே மக்கள்‘. சஞ்சீவன் அந்திக்காடு டைரக்டு செய்திருந்தார். கடந்த 2012ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது. இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் இப்படம் யு டியூப்பில் அப்லோட் செய்யப்பட்டது. மத உணர்வுகள், பகுத்தறிவுவாதம் மற்றும் மத சார்பின்மைகளை விமர்சித்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.யு டியூபில் படத்தை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும், தடை செய்ய வேண்டும் என்றும் கமென்ட் வெளியிட்டனர். இதையடுத்து இப்படம் தடை செய்யப்பட்டதாக யு டியூப் அறிவித்துள்ளது. இதற்கு பட இயக்குனர் கண்டனம் தெரிவித்துள்ளார். சிலரின் தூண்டுதலின் பேரில் இப்படம் தடை செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top