உலகின் எந்த மொழி திரைப்படமும் இதுவரை சாதித்திராத, இனியும் சாதிக்க முடியாத ஒரு உச்ச கட்ட சாதனை ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற திரைப்படம் செய்துள்ளது.
திரையரங்கில் 3 வாரம் ஓடினாலே வெற்றி நடை போடுவதாக சொல்லப்படும் இந்தக் காலத்தில் 1009 வாரமாக ஒரு திரைப்படம் ஒரே திரையரங்கில் திரையிடப்படுவது வெறும் சாதனை அல்ல. அதுக்கும் மேல….
ஷாருக்கான், கஜோல் நடிப்பில், கடந்த 1995-ம் வருடம், அக்டோபர் மாதம் வெளியான இந்தி படம் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே. இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து சுமார் 20 வருடங்களாக மும்பையிலுள்ள ‘மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில் தினமும் காலை 11-30 காட்சியாக தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் 1000-மாவது காட்சி இந்த திரையரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட நிலையில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களை சரியாகத் திரையிடமுடியாத காரணங்களால் இன்று காலையே திரைப்படத்தின் கடைசி காட்சி என்று திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரியக்காட்சியை 210 ரசிகர்கள் கண்டு களித்தனர்.
20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து தினமும் ஷாருக்-கஜோலின் காதலை சலிக்காமல் ரசித்து வந்த பல ரசிகர்கள் இனி இந்த திரைப்படத்தை இந்த தியேட்டரில் காண முடியாது என்பதால் ஏக்கமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.