சமீபத்தில் சம்பள பிரச்சனையை காரணம் காட்டி இந்தியாவுக்கு எதிராக நடந்த தொடரை பாதியிலே மேற்கிந்திய தீவுகள் அணி கைவிட்டது. இது இரு நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு இடையில் பிரச்சனையை உண்டாக்கியது.
இந்தப் பிரச்சனைக்கு முன்னணி வீரர்கள் தான் காரணம் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் பொல்லாட், வெய்ன் பிராவோவை உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யவில்லை.
இந்நிலையில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணத் தொடரில் கத்துக்குட்டி அணிகள் கூட மேற்கிந்திய அணியை கதறவிடுகிறது.
இது தொடர்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவர் பிரையன் லாரா கூறுகையில், கவுரவமிக்க உலகக்கிண்ண போட்டிக்கு இத்தகைய அணி தெரிவு செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது, எங்களுக்கு நாங்களே உலை வைத்தது போன்று இருக்கிறது.
சகலதுறை வீரர் பொல்லார்ட்டும், வெய்ன் பிராவோவும் இந்த உலகக்கிண்ணத்தில் விளையாடி இருக்க வேண்டும். அவர்களை ஏன் தெரிவு செய்யவில்லை? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment