↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய் நடித்து வரும் புலி படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புலி படக்குழுவினர் சென்னையில் ஒரு பாடல் காட்சியை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

புலி' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து வரும் வித்யூலேகா ராமன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'விஜய்யின் அற்புதமான நடனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், அவருடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய அனுபவம் மறக்க முடியாதது' என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேண்டஸி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வரும் புலி' படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, இமான் அண்ணாச்சி, சத்யன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சிம்புதேவன் இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை ரிலீஸாகமால் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top