↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஹாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கெளரவிப்பதை போலவே மோசமான படங்கள் மற்றும் மோசமான நடிகர் நடிகைகளுக்கும் விருது வழங்கி அவர்களை கலாய்க்கும் நிகழ்ச்சியும் நடப்பதுண்டு. இந்த கலாச்சாரம் தற்போது பாலிவுட்டிலும் தோன்றியுள்ளது.

கோல்டன் கேலா என்ற அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டின் மோசமான படங்கள் மற்றும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய தற்போது பட்டியல் தயாரித்து வருகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்கள் மற்றும் படங்கள் குறித்து பார்ப்போம்.

மோசமான நடிகைகள் பட்டியலில் பேங் பேங் படத்தில் நடித்த காத்ரீனா கைப், ஆக்சன் ஜாக்சன், லிங்கா, மற்றும் ஹாலிடே படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா, மற்றும் தமன்னா, சோனம் கபூர், ஜாக்குலீன் பெர்னாண்டஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மோசமான நடிகையாக தேர்வு செய்யப்படுவார்.

அதேபோல் மோசமான நடிகர்கள் பட்டியலில் அர்ஜூன் கபூர், சைப் அலிகான், சல்மான்கான், அஜய் தேவ்கான், ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

மோசமான படங்கள் பட்டியலில் சல்மான்கானின் கிக், பிரபுதேவாவின் ஆக்சன் ஜாக்சன், சயீப் அலிகானி, ஹம்ஷக்கல்ஸ், ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர், ஹிருத்திக் ரோஷனின் பேங் பேங் ஆகிய படங்கள் உள்ளன. விரைவில் இந்த விருதுக்குரியவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top