↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வாயை மூடி பேசவும், காவியத்தலைவன் போன்ற படங்களை தயாரித்த சசிகாந்தின் “ஒய்” நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் “இறுதி சுற்று”.

துரோகி படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இயக்கிவரும் இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவன் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழிலும், இந்தியிலும் தயாராகும்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மாதவன் பாக்ஸிங் வீரராக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது படத்தின் பின்னணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் டப்பிங் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் இந்தி டப்பிங் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.  மேலும் இப்படத்தை மே மாதம் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top