தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து இயக்குனர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு டச் இருக்கும்...ச்சே அந்த ட்ரைக்டர் அந்த படத்துல பிண்ணிட்டாருடா என்று கூறுவது அவர் நம்மை எந்த அளவிற்கு அவருடைய படங்களை ரசிக்க வைத்திருக்கிறார் என்பதே. ஆனால், இவர்கள் எல்லோருக்கும் ஒரு வகையான டச் இருக்கும். இவர்கள் இயக்கும் பெரும்பாலான படங்களில் சில காட்சிகளை நினைவூட்டும் படி எடுப்பார்கள். அதைப்பற்றியே தொகுப்பு தான் இந்த பகுதி.
மணிரத்னம்:
மணிரத்னம் படங்கள் என்றாலே, மௌனம், அளவான பேச்சு என இவர் இயக்கும் அனைத்து படங்களிலும் இருக்கும். இதில் குறிப்பாக மணிரத்னம் தன் படங்களில் ரயிலை காட்டாமல் இருக்கவே மாட்டார். இவர் பெரும்பாலான படங்களில் ஏதோ ஒரு காட்சியில் ரயிலை காட்டிவிடுவார். இது தான் இவரோட ஸ்பெஷல்
ஷங்கர்
ஷங்கர் என்றாலே நாட்டுக்கு கருத்து சொல்வது தான் ஹைலட். ஆனால், அவர் காதல் படம் எடுத்தாலும் தவறாமல் இடம்பெறுவது மைக் தான். யாராவது ஒருத்தர் சம்மந்தமே இல்லாமல், சொல்லுங்க என் நம்ம இந்தியா மட்டும் இப்படி இருக்குன்னும் மைக்க ஹீரோ மூக்குக்கு முன்னாடி நீட்டி கேள்வி கேட்பது போல் எடுத்து விடுவார். இதை கலாய்க்கும் விதமாக ஷங்கர் தன் ஐ படத்தில் சந்தானத்தையே இந்த காட்சியை செய்ய வைத்திருப்பார்.
கே.எஸ்.ரவிக்குமார்
கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் டச்சே அவர் தான். ஏனெனில் அவர் படங்களில் தொடர்ந்து இடம்பெறும் ஒரே செண்டிமென்ட் அவரே திரையில் தோன்றுவது தான். இதையும் லிங்கா படத்தில் சந்தானமே இவர் தான் ‘பினிஷிங் குமார்’ என்று கிண்டல் செய்யும் விதமாக காட்சிகளை வைத்து தன்னை தானே கிண்டல் செய்து கொண்டார்.
பாலா
பாலா எப்போதும் ஒரு இருண்ட உலகத்தையே தான் காட்டுவார். உலகின் அல்ட்ரா மாடல் கூட இவர் படத்தின் ஹீரோ ஹேர்ஸ்டைல் முன்னால் தோற்றுவிடுவார்கள். தன் படத்தின் ஹீரோக்களுக்கு அழகழகாக முடிவெட்டி தான் இயக்கிய அனைத்து படத்திலும் அழகுப் பார்ப்பார்.
செல்வராகவன்
செல்வராகவன் படம் என்றாலே ஹீரோவிற்கு என்று ஒரு ஹீரோயின் இருக்காது. எப்போதும் தன் நண்பர்களின் காதலிகளையே பெரும்பாலும் ஹீரோ காதலித்து, அவர்கள் சாபத்திற்கு ஆளாகி, பின் சைக்கோ ஆகி, மீண்டும் அந்த பெண்ணே அவளை திருத்துவாள். பெரும்பாலும் பெண்களுக்கு மிகவும் பவர்புல்லான கேரக்டர்களை தன் படத்தில் தொடர்ந்து வைத்து வருகிறார்.
கௌதம் மேனன்
கௌதம் மேனன், மணிரத்னத்தின் க்லோனிக் வெர்ஷன். இவரும் தன் பட ஹீரோக்களுக்கு என்று ஒரு வரையறை வைத்திருப்பார். மெக்கானிக்கல் இன்ஜினியர், கட்டம் போட்ட சட்டை, காக்கி சட்டை, கைய்ல காப்பு என இந்த வட்டத்திற்குள்ளே இருப்பார்கள். என்ன காதல், காக்கிசட்டை என இரண்டு கதைகளை விட்டு வெளியவே இவரால் வரமுடியவில்லை.
வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு படம் என்றாலே ஜாலி, கேலி, கலாட்டா தான், இவரது படங்களில் ஹீரோ நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும், அம்மாவை காப்பற்ற வேண்டும் என்பது போல் தான் இருக்கவே இருக்காது. ஜாலியாக வந்து குடித்து விட்டு கும்மாளம் போட்டு விட்டு செல்வார்கள். ஆனால், இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஹீரோ குடித்து விட்டு பழையதை எல்லாம் மறப்பது போல் ஒரு காட்சியை வைத்து விடுவார்.
0 comments:
Post a Comment