↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்காவில் 55 வயது பெண் அரசியல்வாதி ஒருவர் தனது பிராவில் துப்பாக்கி வைக்கும் இடத்தை சரி செய்தபோது துப்பாக்கியில் இருந்து ஏதேச்சையாக குண்டு பாய்ந்து அவர் பலியானார். அமெரிக்காவில் உள்ள மிஷிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஸ்டினா பாண்ட்(55). குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். 2 குழந்தைகளின் தாயான அவர் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்தவர். மேலும் 2013ம் ஆண்டுக்கான மிஷிகன் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்.
அவர் தனது பிராவில் கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பழக்கம் உள்ளவர். இந்நிலையில் அவர் தனது பிராவில் துப்பாக்கி வைக்கும் இடத்தில் கைத்துப்பாக்கியை வைத்து அணிந்துள்ளார். ஆனால் துப்பாக்கி சரியான இடத்தில் இல்லை. இதனால் அவர் தலையை குனிந்தபடி அதை சரி செய்துள்ளார்.
அப்போது துப்பாக்கியில் இருந்து எதேச்சையாக குண்டு வெடித்து கிரிஸ்டினாவின் கண்ணில் பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்தவரை உடனே லேக் மிஷிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். கைத்துப்பாக்கி வைக்கும் வசதியுடன் கூடிய பிரா மற்றும் கைப்பைகள் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment