↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ajith, bindu madhavi
அஜித், சிவா மீண்டும் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் கதாநாயகி யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஹன்சிகா,சமந்தா.. என்று சில நடிகைகளின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டன. 

அதேபோல தற்போது இன்னொரு ஊகமும் எழுந்துள்ளது..
தல56 என்றழைக்கப்படும் இந்த படத்தில் இரு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்களாம். அதில் ஒருவர் ஸ்ருதி ஹாசன், மற்றொருவர் பிந்து மாதவி என்று கூறப்படுகிறது.
தான் அஜித்தின் மிக தீவிரமான ரசிகை என்றும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் எப்படியாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்பதுதான் தன்னுடைய ஆசை என்றும் பிந்து மாதவி சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். தற்போது அவரது ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் உண்மையான நாயகி என்று.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top