↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நாகார்ஜுனன் நடத்தி வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வருண் தேஜ், நிதின், ராகுல் ப்ரீத்தி சிங், சமந்தா, பூஜா ஹெக்டே, சுதீப், சர்வானந்த் மற்றும் தமன்னா உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாகவும், அவர் கலந்து கொண்ட எபிசோட் பிப்ரவரி கடைசி வாரத்தில் ஒளிபரப்பாகும் என்றும் செய்திகள் கூறுகின்றன. கமல்ஹாசன் ஏற்கனவே தமிழின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் நடத்திய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திரையுலக அனுபவங்களை தொலைகாட்சி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை அடுத்து ராம்சரண் தேஜா, நானி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர்களும் அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top