↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தென் ஆப்பிரிக்க அணியை கிண்டல் செய்து இந்திய ரசிகர்கள் பதிவேற்றிய பதிலடி வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் பரபரப்பாய் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அப்போது இந்தியா, பாகிஸ்தான் போட்டியை மையமாக வைத்து ஒரு விளம்பரம் செம ஹிட் அடித்தது.
அதில் 1992, 1996, 1999, 2003, 2011 ஆகிய உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, இந்த உலகக்கிண்ணத் தொடரிலும் வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பை அந்த விளம்பரம் ஏற்படுத்தி இருந்தது.
இந்தியா, பாகிஸ்தானுடனான போட்டியில் 6-0 என்ற சாதனை வெற்றியை எப்படி பெற்றிருக்கிறதோ அதே போல் தென் ஆப்பிரிக்காவுடன் (1992, 1999, 2011) 3-0 என்ற தோல்வியை சந்தித்துள்ளது.
சமீபத்தில் இதை நகைச்சுவையாக பிரதிலிக்கும் விளம்பரமும் பிரபலமடைந்தது. அதில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டியை இந்திய ரசிகர்கள் ஐந்து பேர் ஒன்றாக சேர்ந்து பரபரப்பாய் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறது. உடனே ஒருவர் மட்டும் எழுந்து சென்று கதவைத் திறக்க, அங்கே இரண்டு தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் கையில் பட்டாசுப் பெட்டியுடன் கேலிச் சிரிப்பு சிரித்துக் கொண்டே நிற்கின்றனர்.
உடனே அவர்கள் 'மோக்கா..! மோக்கா..!' (வாய்ப்பு / சந்தர்ப்பம்) என்று பாடிய படியே பட்டாசுப் பெட்டியை இந்திய ரசிகர்கள் கையில் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்த முறையாவது இந்தியா வெற்றி பெறுவோமா என்ற கேள்வியோடு, கையில் வாங்கிய பட்டாசுப் பெட்டியை அவர்கள் உள்ளே எடுத்துச் செல்வதாக முடியும் அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ரசிகர்கள் ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றி இருக்கின்றனர்.
அதே போல் தொடங்கும் இந்த விளம்பரத்திலும் நண்பர்கள் ஒன்றாய் உட்கார்ந்து குளிர்பானம் அருந்திக்கொண்டே போட்டியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அழைப்பு மணி தொடர்ந்து ஒலிக்கிறது. ஒரு நண்பர் சென்று கதவைத் திறக்கிறார்.
அங்கே இரண்டு தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் சிரிப்புடன், 'மோக்கா... மோக்கா!’ என பாடிக் கொண்டே கையில் பட்டாசுப் பெட்டியைக் கொடுத்துவிட்டு செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் இந்திய ரசிகர், தன் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூன்று புகைப்படங்களைக் காட்டுகிறார்.
முதல் படத்தில் 1983ல் உலகக்கிண்ணத்தை வென்ற கபில்தேவ், இரண்டாவதில் 2011ல் உலகக்கிண்ணத்தை வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியினர், மூன்றாவதில் டி20 வெற்றிக்கிண்ணத்துடன் அணித்தலைவர் டோனி ஆகியோர் சிரித்த படி இருக்கின்றனர்.
அதைப் பார்த்து தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ளும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் இருவரிடமும், இந்திய ரசிகர் பட்டாசுகளைத் திருப்பிக் கொடுக்கிறார்.
பிறகு 'மோக்கா... மோக்கா!' எனப் பாடி, ஒரு முறை கூட தென் ஆப்பிரிக்க அணி உலகக் கிண்ணத்தை வெல்லவில்லை என்பதை சொல்லும்படியாக முடிகிறது அந்த வீடியோ.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top