↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோரது நடிப்பில் பிப்ரவரி 5ஆம் தேதி வெளிவந்த 'என்னை அறிந்தால்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை பல தியேட்டர்களில் அரங்குநிறைந்த காட்சிகளாக வசூலில் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி இப்படம் ஓவர்சீஸிலும் பெரிய அளவில் வசூலித்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. 

'என்னை அறிந்தால்' படம் இதுவரை வெளிநாடுகளில் மட்டும் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, இதுவரை உலக அளவில் வசூலில் சாதனை படைத்த 'டாப் 10 வசூல்' தமிழ்ப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஏற்கெனவே அஜித் நடித்த 'ஆரம்பம்' படம் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இப்போது என்னை அறிந்தால் படமும் சேர்ந்துள்ளது. 


எந்திரன், சிவாஜி, தசாவதாரம், துப்பாக்கி, சிங்கம் 2, ஆரம்பம், கத்தி, லிங்கா, ஐ ஆகிய படங்கள் 'டாப் 10' பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்திருக்கின்றன. இப்பட்டியலில் ரஜினியின் படங்கள்தான் அதிகபட்சமாக 3 படங்கள் இடம்பெற்றுள்ளன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top