↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி சனிக்கிழமை சுமார் 2ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைச் செய்யக் கோரியும், அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும் தமிழகமெங்கும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம், மனிதசங்கிலி போன்ற போராட்டங்களை நடத்தி வரும் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்கள் முகாம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். 

இந்த உண்ணாவிரதத்தில் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 948 குடும்பங்களை சேர்ந்த சுமார் 200பேர் கலந்துக் கொண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இலங்கை அகதிகள் முகாம் தலைவர் கணேசன், துணை தலைவர் வேதநாயகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் நாதன் ஏற்பாடு செய்திருந்தனர். முகாமில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கோபால்நாயுடு, நகர செயலாளர் மு.க.சேகர், ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட இலங்கை தமிழரான கண்ணன் பேசுகையில், தமிழகத்தில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் அவல நிலையை கண்டு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளார். 

அகதிகள் முகாமில் சிமெண்ட் சாலை, இலவச மின்சாரம், குடியிருக்க வீடுகள், மகளிர்களுக்கு தையல் இயந்திரம், முதியோருக்கு உதவித் தொகை, மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, இலவச பள்ளிச்சீருடை, நோட்டுப் புத்தகம், விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு திருமண உதவித் தொகை என தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இணையாக அகதிகளுக்கு ஜெயலலிதா அம்மையார் அவரது கடந்த 3 ஆண்டு ஆட்சியில் வழங்கியுள்ள நிலையில் அவருக்கு சிறை தண்டனை அளித்துள்ளது.

முகாமில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்களையும் பெரும் வேதனைப்படுத்தியது என்றதோடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற முகாமில் உள்ள அனைவரும் இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top