↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சமீபத்தில் பூஜை, ஆம்பள ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த விஷால் அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவர் மீண்டும் காக்கி சட்டையை அணியவிருக்கின்றார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே விஷால் சத்யம், வெடி ஆகிய இரண்டு படங்களில் காக்கி சட்டை அணிந்து போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தின் போலீஸ் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் முழுக்க முழுக்க சென்னையின் பின்னணியில் அமைந்துள்ளது என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

விஷால், காஜல் அகர்வால் ,சூரி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் பரத் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ஆண்டனி எடிட்டிங்கும் செய்யவுள்ளனர். இந்த படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top