↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இதோ இன்னும் ஒரு அக்கப் போருக்கு இந்தியா தயாராகி விட்டது. பாகிஸ்தானை போன வாரம் போட்டு தாக்கிய இந்தியா, இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுடன் மல்லுக்கட்டுக்குத் தயாராகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் வரலாறு படைத்தது. பாகிஸ்தானை இந்தியா தோல்வியுற வைத்து ரசிகர்களை உற்சாகக் கடலில் மூழ்கடித்தது. 

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தியா, தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. எப்படி பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை ஒரு முறை கூட உலகக் கோப்பையில் வென்றதில்லையோ, அதே போலத்தான் தென் ஆப்பிரிக்காவையும் இதுவரை இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை. இரு அணிகளும் இதற்கு முன்பு 3 முறை மோதியுள்ளன. இப்போது நான்காவது மோதல்.

தென் ஆப்பிரிக்க அணி ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லைதான். இருந்தாலும், ஏதோ மிஸ் ஆவது போலவே ஒரு ஃபீலிங் இந்தியாவிடம் இருந்து கொண்டே இருக்கிறது. வெற்றி நழுவியபடியே இருக்கிறது. இந்த முறை சில வித்தைகளை இந்தியா அரங்கேற்றினால் தென் ஆப்பிரி்க்காவை வெல்வது சுலபம் என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள். அவர்கள் சொல்லும் வைத்தியம் இதுதான்.

ஏப் டிவில்லியர்ஸ், ஹஷிம் ஆம்லா, டுமினி, டூ பிளஸ்ஸிஸ், டேவிட் மில்லர், டேல் ஸ்டெயின். இவர்களுக்குத்தான் இந்தியா குறி வைக்க வேண்டும். இதில் ஸ்டெயின் பந்து வீச்சாளர், உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளர். மற்றவர்கள் பேட்ஸ்மேன்கள், சாதாரணமானவர்கள் அல்ல, அபாயகரமானவர்கள் இந்தியா முதலில் பேட் செய்வதாக இருந்தால் டேல் புயலைத் தாக்குப் பிடித்து ஆடும் அளவுக்கு முதலில் மனோ திடத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். டேல் ஸ்டெயின், பிலான்டர், இம்ரான் தாஹிர் இவர்களை சமாளித்து ரன் குவிக்க முயல வேண்டும்.

தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்வதாக இருந்தால் இந்தியா மிக மிக கவனத்துடன் காய் நகர்த்த வேண்டியது அவசியம். ஒட்டுமொத்த பவுலிங் அட்டாக்கையும், பீல்டிங்கையும் இறுக்கிப்பிடித்தாக வேண்டும் கேப்டன் டோணி. தென் ஆப்பிரிக்கர்கள் ரன் குவிப்பதைத் தடுக்க செய்ய வேண்டியது, ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் குறி வைத்துத் தூக்குவது. வில்லியர்ஸ், ஆம்லா, குவின்டன் டி காக், டுமினி, பிளஸ்ஸிஸ் மில்லர் என ஒவ்வொருவரையும் குறி வைத்துத் தூக்க வேண்டும். பெரிய அளவிலான பார்ட்னர்ஷிப் அமைந்து விட வாய்ப்பே தரக் கூடாது.

எவ்வளவு துரிதமாக விக்கெட்களை தூக்குகிறோமோ அந்த அளவுக்கு பவுலர்களுக்கு நல்லது. கடைசி வரைக்கும் நின்று ஆடக் கூடிய அபாயகரமான அணி தென் ஆப்பிரிக்கா. எனவே எந்த விக்கெட்டையும் சாமானியமானதாக நினைத்து விடாமல் விரைவிலேயே விக்கெட்களை விழ வைக்கும் வகையில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக இருக்க வேண்டும். இவர்களில் மிகவும் அபாயகரமானவர் யார் என்றால் அது அம்லா மட்டுமே. இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றால் போதும் அம்லாவுக்கு அப்படி ஒரு மலர்ச்சியும், சந்தோஷமும் வந்து விடும். அடி பின்னி பெடலெடுத்து விடுவார்.

இந்தியாவுக்கு எதிராக இவர் இதுவரை 12 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 2 முறை சதம் போட்டுள்ளார். 5 முறை அரை சதம் போட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிராக மட்டும் இவரது பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 58 சதவீதமாக உள்ளது. இந்திய பவுலர்களை பதம் பார்ப்பதில் இவர் நம்பர் ஒன் வீரர். இறங்கி வெளுத்து விடுவார். எனவே இவரை எவ்வளவு சீக்கிரம் தூக்குகிறோமோ அவ்வளவுக்கு நல்லது.

தென் ஆப்பிரிக்கர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய பாணியில்தான் நம்மை முடக்கப் பார்ப்பார்கள். அதாவது வேகப் பந்து வீச்சை வைத்து நம்மை காலி செய்ய முயற்சிப்பார்கள். பவுன்சர்கள் அதிகம் வரும், முறைப்பார்கள், வம்பிக்கிழுப்பார்கள். இதையெல்லாம் நாம் சமாளிக்க வேண்டும். தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சை லாவகமாக சமாளித்து நிலைத்து நின்று ஆட வேண்டும். நல்ல பார்ட்னர்ஷிப்புக்கு முயற்சிக்க வேண்டும். முன்னணி வீரர்கள் சிறப்பாக ஆடி அசத்த வேண்டும். அம்லா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்களை ரன் குவிக்க விடாமல் தடுக்க வேண்டும். நமது பீல்டிங்கையும், பவுலிங்கையும் சிறப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். இதைச் செய்தால் தென் ஆப்பிரிக்காவையும் நாம் வெல்ல முடியும்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top