↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான். உலக கோப்பை குரூப் பி லீக் ஆட்டத்தில் கிறைஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் மோதின.
டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவுகளின் பேட்ஸ்மேன்கள் கடைசி நேரத்தில் ரவுண்டு கட்டி அடித்து ஸ்கோரை 310ஆக உயர்த்தினர்.
இதனிடையே 2வதாக பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தானோ, ஆட்டத்தின் 2வது பந்திலேயே நாசிர் ஜாம்ஷெட் விக்கெட்டை பறிகொடுத்தது. எனவே பூஜ்யம் ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். ஜெரோம் டைலர் பந்தில் ஆன்ட்ரே ரசலிடம் கேட்ச் கொடுத்து ஜாம்ஷெட் நடையை கட்டினார்.
பாகிஸ்தான் ஒருரன் எடுத்திருந்த நிலையில் ஒன்டவுன் இறங்கிய யூனிஸ்கான் முதல் பந்திலேயே அவுட் ஆனார். இதையடுத்து ஹரீஷ் சொகைல், அகமது செஷாத் ஆகியோரும் அவுட் ஆகினர். அப்போது 3.1 ஓவர்களில் பாகிஸ்தான் 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான தொடக்கத்தை கொடுத்த நாடு பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துள்ளது பாகிஸ்தான்.
முன்னதாக 2006ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கனடா அணி, 4 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்ததுதான் மோசமான சாதனையாக இருந்து வந்தது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» உங்ககிட்ட ஓப்பனிங்கே நல்லாயில்லயப்பா.. கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் பதிவு செய்த மோசமான சாதனை!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment