பிரபல காமெடி - கேரக்டர் - ஹீரோ நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், திடீரென அரசியலில் குதித்துள்ளார். வக்கீல் பால் கனகராஜ் நடத்தி வரும் தமிழ் மாநில கட்சியில் இணைந்துள்ளார். சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் திடீரென மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் எத்தனையோ நடிகர்கள் கட்சியில் சேர்ந்து மக்கள் சேவை ஆற்றி வருகின்றனர். இந்த வரிசையில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களை வைத்துள்ள பவர் ஸ்டாரும் அரசியலில் குதித்து சேவையாற்ற வந்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.