உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வாட்டர் டயட் ஒரு பயனுள்ள வழியாகும். நாம் உணவில்லாமல் கூட இருக்க முடியும் ஆனால் நீரில்லாமல் 3 நாட்களுக்கு மேல் உயிர் வாழவே முடியாது. ஏனெனில் உடலுக்கு நீர் சத்து மிகவும் அவசியமானதாகும். அத்தகைய நீர்சத்துள்ள உணவுப் பொருட்களை நாம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடையை 7 நாட்களுக்குள் குறைக்கலாம்.
இந்த வாட்டர் டயட்டை பின்பற்றுவதன் மூலம் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சரி, இப்போது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய அந்த வாட்டர் டயட் பற்றிப் பார்ப்போமா!!!
டே 1: தண்ணீர்
வாட்டர் டயட்டின் முதல் நாளில் வெறும் தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அதிலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
டே 2: க்ரீன் டீ
வாட்டர் டயட்டின் இரண்டாம் நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை க்ரீன் டீயை மட்டுமே பருக வேண்டும். பசி எடுக்கும்போது ஒரு கப் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதை கூட பசியில்லை என்றால் சாப்பிடாமல் விட்டுவிடலாம். க்ரீன் டீ அதிகம் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற தொடங்கும்.
டே 3: ஐஸ் தண்ணீர்
வாட்டர் டயட்டின் மூன்றாவது நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐஸ் தண்ணீரைப் பருக வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசமானது அதிகரிக்கும். காலை ஒரு கப் வெள்ளரியும் இரவு ஒரு கப் தர்பூசணி பழமும் சாப்பிட வேண்டும்.
டே 4: வெல்லம் கலந்த நீர்
நான்காம் நாள் 5 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் அந்த நீரில் 2 டேபிள் ஸ்பூன் வெல்லத்தைச் சேர்த்து கலந்து பருக வேண்டும். இதனால் உடலின் எனர்ஜியானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.
டே 5: சூப்
வாட்டர் டயட்டின் ஐந்தாம் நாளில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்களை உடலில் சேர்க்க வேண்டும். அதற்கு ஐந்தாம் நாளன்று நான்கு முறை ஒரு கப் உங்களுக்கு பிடித்த சூப்பை குடிக்க வேண்டும். அது அசைவ சூப்பாக கூட இருக்கலாம்.
டே 6: ஜூஸ்
வாட்டர் டயட்டின் ஆறாம் நாள் சர்க்கரை சேர்க்காமல் செய்யப்பட்ட பிரஷ் ஜூஸ்களை குடித்து வர வேண்டும். இந்த நாளின் காலையும் இரவும் வெதுவெதுப்பான நீரில் தேனும் அரை மூடி எலும்பிச்சம் பழத்தை சாறு பிழிந்து குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.
டே 7: இனிப்பு தண்ணீர்
வாட்டர் டயட்டின் ஏழாம் நாளன்று குடிக்கும் நீரில் 1 சிட்டிகை சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர வேண்டும். இதனால் எடை குறைவதுடன், உடலின் இரத்த அழுத்தமானது சீராக இருக்கும். மதியம் ஒரு கப் அரிசி சோறு சாப்பிட வேண்டும் இரவு உப்பு சேர்த்த ஓட்ஸ் கஞ்சியுடன் வாட்டர் டயட்டை முடித்துக் கொள்ளலாம்.
குறிப்பு:- மேற்கூறியவாறு பின்பற்ற முடியாவிட்டால், ஒவ்வொரு நாளும் அவ்வப்போது வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி பழங்களை சாப்பிட்டு வாருங்கள்.
0 comments:
Post a Comment