↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
18 பந்துகளில் அரை சதம் கடந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் பிரெண்டன் மெக்கல்லம் இதன் மூலம் குறைந்த பந்தில் உலக கோப்பை போட்டியொன்றில் அடிக்கப்பட்ட அரை சதம் என்ற சாதனையை படைத்துள்ளார். 2007ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது கனடாவுக்கு எதிராக, 24 பந்துகளில் அரை சதம் கடந்தார் பிரெண்டன் மெக்கல்லம். இதுதான் இதுவரையில் உலக கோப்பையில் சாதனையாக இருந்தது.
ஆனால் இன்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதே மெக்கல்லம், 18 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். 17 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம், 18வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். எனவே, தனது சாதனையை தானே முறியடித்தார் மெக்கல்லம். இதைத்தொடர்ந்து 4 சிக்சர்களை வரிசையாக தூக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார் மெக்கல்லம்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» இங்கிலாந்தை போட்டு துவைத்த நியூசிலாந்து.. 18 பந்துகளில் மெக்கல்லம் அரை சதம்.. தனது சாதனையை தானே தகர்த்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment