தனுஷுடன் மோதலா என்கிறார்கள்? அவருடன் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. காக்கி சட்டை படத்துக்கு பிறகு மீண்டும் இந்த குழுவுடன் இணைகிறேன். காதல், காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸ் கதை வந்தது. எனது அப்பா போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். காக்கி சட்டை யூனிபார்ம் அணிந்தபோது அவரது ஞாபகம்தான் வந்தது. நானும் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அது சினிமாவில்தான் நடந்திருக்கிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் இதில் ஜோடியாக நடிக்கிறார்.
இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது. 3வது படத்தில் இணைந்தால் இன்னும் அதிகமாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது. எனக்கு மேனேஜரும் கிடையாது, உதவியாளரும் கிடையாது. ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டீர்களா என்கிறார்கள். காதல், காமெடி கலந்த கதைகளே செய்துக்கொண்டிருந்ததால் ஆக்ஷனுக்கு மாறினேன். அடுத்து நடித்திருக்கும் ரஜினி முருகன் படம் காமெடியை மையமாக கொண்ட கதைதான். ரஜினி நடிப்பை காப்பி அடிப்பதாக கூறுகிறார்கள். அப்படி செய்யவில்லை. அவரது வெறித்தனமான ரசிகன் என்பதால் ஒரு சில காட்சிகளில் எனக்கே தெரியாமல் அது வரலாம்.இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.
0 comments:
Post a Comment