
ஏற்கனவே ராசியில்லாத ஜோடி என்று பேசப்படும் இருவரையும் மறுபடியும் இயக்குனர் ஜோடி சேர்த்திருப்பது இண்டஸ்ரிகாரர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விக்ரம் குமார் தெலுங்கில் இயக்கிய ‘மனம்‘ படத்தில் சமந்தா நடித்திருந்தார். அப்படம் ஹிட்டானது. இப்போது ‘24‘ படத்துக்கு ஹீரோயின் தேடுவதை அறிந்து, சமந்தாவே விக்ரம் குமாரிடம் பேசி சான்ஸ் கேட்டாராம். பாலிவுட் நடிகைகள் சிலரிடம் பேசி கால்ஷீட் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் விக்ரம் குமாரும் சமந்தாவை தேர்வு செய்துவிட்டாராம். இதை கேள்விப்பட்டதும் இந்த படத்தில் நடிக்க முயன்ற தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் ஷாக் ஆகிப்போனார்களாம். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். படத்திற்கான பாடல் பதிவை ரஹ்மான் ஏற்கனவே தொடங்கி விட்டார். ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
0 comments:
Post a Comment