↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள் அதிகம் விரும்பும் 11 வீரர்கள் அடங்கிய அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளில் இருந்து தலா 3 வீரர்களும், இலங்கையை சேர்ந்த இருவரும், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேச அணிகளில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் இருந்து யாரும் வீரர்களும் தெரிவு செய்யப்படவில்லை. அதேபோல் கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்தும் யாரும் இடம் பெறவில்லை.
மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஏலம் எடுக்க கூட ஆள் இல்லாமல் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் ஆம்லாவுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை, துணை அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் விக்கெட் கீப்பர் வரிசையில் அணித்தலைவர் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 11 வீரர்கள் விவரம்:-
1.ஹாசிம் ஆம்லா- தென் ஆப்பிரிக்கா
2.பிரண்டன் மெக்குல்லம்- நியூசிலாந்து
3.குமார் சங்கக்காரா- இலங்கை
4.விராட் கோஹ்லி- இந்தியா
5.ஏபி டி வில்லியர்ஸ்- தென்ஆப்ரிக்கா
6.ஸ்டீவ் ஸ்மித்- அவுஸ்திரேலியா
7.சாகீப் அல் ஹசன்- வங்கதேசம்
8.ஜேம்ஸ் பக்னர்-அவுஸ்திரேலியா
9.மிட்செல் ஜான்சன்- அவுஸ்திரேலியா
10.மேல் ஸ்டெயின்- தென் ஆப்பிரிக்கா
11.லசித் மலிங்கா- இலங்கை

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top