↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தங்கமீன்கள் ராம் இயக்கத்தில் மம்முட்டி - Cineulagam
மலையாள சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர் மம்முட்டி. இவர் தற்போது மலையாளத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் பாஸ்கர் தி ராஸ்கல்.
இப்படத்திற்கு பிறகு மம்முட்டி தங்கமீன்கள் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படம் மூலம் மீண்டும் தமிழில் களமிறங்கவுள்ளார். ஏற்கெனவே பல தமிழ் படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடைசியாக நடித்த தமிழ் படம் வந்தே மாதரம்.
ராம் மம்முட்டியிடம் சொன்ன ஒரு ஒன் லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். தற்போது ராம் இயக்கும் தரமணி படத்தின் வேலைகள் முடிந்ததும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் முழு மூச்சாக இறங்க இருக்கிறாராம் ராம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top