↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் முன்பாக பெஞ்ச் பயிற்சி எடுத்த விராட் கோஹ்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கான வலைப்பயிற்சியின்போது வேகப் பந்து வீச்சில் பயிற்சி எடுக்காமல் சுழல் பந்தில் அதிக நேரம் பயிற்சி எடுத்து வருகிறார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் மிகவும் உயரமானவர் என்பதால், பெஞ்ச் மீது ஏறி நின்று பயிற்சியாளர் பந்து வீச அதை கோஹ்லியும், ரஹானேவும் அடித்து ஆடி பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுடனான லீக் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலும் பந்தை பவுன்ஸ் செய்ய கூடிய மோர்னே மோர்க்கல், டேல் ஸ்டெயின் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணியின் வியூகமோ வேறு மாதிரி உள்ளது. வலைப்பயிற்சியின்போது கோஹ்லி, ஸ்பின் பந்துகளை எதிர்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கோஹ்லிக்கு அக்ஷர் பட்டேல், சுரேஷ் ரெய்னா மற்றும் பயிற்சிக்கான பந்து வீச்சாளர்கள் சுழல் பந்துகளை வீசினார்கள்.

தென் ஆப்பிரிக்கா எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களை நம்பி களமிறங்கியது கிடையாது. அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கமே அதிகம். இந்தியாவுடனான போட்டியில் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாகிர் அல்லது இடது கை ஸ்பின்னர் ஆரோன் பான்கிசோ ஆகிய இருவரில் ஒருவரை சுழற்பந்து வீச வைத்துக்கொள்ள தென் ஆப்பிரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கோஹ்லி பெரும்பாலான பந்துகளில் கிரீசை விட்டு இறங்கி வந்து இன்-ஃபீல்டுக்கு மேலாக பந்தை தூக்கியடிப்பதில் கவனம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. அதே நேரம் ரஹானே, பந்தை தரையோடு அடிப்பதில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்திய கேப்டன் டோணி, தொடக்க வீரர் ரோகித் ஷர்மா போன்றோரும் பயிற்சி எடுத்தபோதிலும், கோஹ்லிதான் வலைப் பயிற்சியில் அதிக நேரம் ஈடுபட்டிருந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top