↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அனுஷ்காவுக்கு இது நல்ல நேரமா கெட்ட நேரமா தெரியவில்லை. அழகு பொம்மையான அவரையே அளந்து அளந்துதான் பயன்படுத்துகிறார்கள் தமிழ்சினிமாவில். சமீபத்தில் வெளிவந்த லிங்கா திரைப்படத்தில் தொட்டுக்கோ, தொடைச்சுக்கோ லெவலில்தான் இருந்தது அவரது தரிசனம். நிறைய்ய்ய்ய்ய்ய எடுத்தாங்க. அப்புறம் எப்படி நறுக்குனாங்க என்பதே புரியாமல் அப்செட் ஆகியிருந்த அவருக்கு அடுத்து பின்னாலேயே வந்தது அடி! இந்த அடி என்னை அறிந்தால் ஸ்பெஷல்….!
என்ன காரணத்தாலோ, அனுஷ்கா போர்ஷனை அநியாயத்துக்கு சுருக்கிய கவுதம் மேனன், த்ரிஷா போர்ஷனை மட்டும் செதுக்கி செதுக்கி வைத்திருந்தார். மேக்கப், காஸ்ட்யூம் விஷயங்களிலும் கூட, அனுஷ்காவுக்கு பல்லி மிட்டாயும், த்ரிஷாவுக்கு அல்வா துண்டும் வழங்கப்பட்டதை நாடே நன்கு அறியும். இந்த நேரத்தில்தான் படத்தின் நீளத்தை குறைக்கப் போவதாக கேள்விப்பட்டாராம் அனுஷ்கா.
அதுவும் சுமார் ஆறு நிமிடங்கள் குறைக்கப்பட்டன என்கிற தகவல் அவர் காதுகளுக்கு போக, கவலை தாங்க முடியவில்லையாம் அவரால். உடனே தனது சோர்ஸ் மூலம் விசாரிக்க சொன்னாராம் அவர். குறைக்கப்பட்டது தனது போர்ஷன்தானா, அல்லது த்ரிஷா போர்ஷனா என்பதுதான் அவரது என்கொயரி. தீர விசாரித்த தொண்டரடி பொடியார்கள் ‘நீங்க கவலைப்பட வேண்டாம். குறைக்கப்பட்டது த்ரிஷாவுக்கு வைக்கப்பட்டிருந்த பாடல் காட்சிதான்’ என்று கூற, இரட்டிப்பு சந்தோஷம் அனுஷ்காவுக்கு.
அந்த இரட்டிப்பு இதுதான். தன்னை நறுக்கவில்லை என்பது ஒன்று. த்ரிஷா நறுக்கப்பட்டது இன்னொன்று!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top