↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய மூன்று படங்களில் தொடர்ச்சியாக கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்த நடிகை பூஜாகுமார், அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் அவர் அரசியலில் குதிக்கவுள்ளதாக பரபரப்பான செய்தி ஒன்று கூறப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒரு பேட்டியில் பூஜாகுமார் கூறியபோது, ''பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது அவருடைய ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், அவருடைய புதுமையான முயற்சிகள் தன்னை மிகவும் கவர்ந்ததால் அவருக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்ததாக கூறினார். மேலும் பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்கும் தனக்கு அரசியல் மீது என்றுமே ஆர்வம் உண்டு என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் அரசியல் கட்சியில் சேர்வது குறித்து எவ்வித எண்ணமும் தனக்கு தற்போது இல்லை என்றும் ஒருவேளை அரசியலில் குதிப்பதாக இருந்தாலும் அதற்கு இன்னும் மிக நீண்ட பயணம் செல்லவேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top