சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கபடுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ‘ மசாலா படம்’.
“ வெற்றி பெரும் மசாலா படங்கள் எதற்காக வெற்றி பெறுகிறதென்று எவராலும் சுட்டிகாட்டுதல் கடினம். அப்படிப்பட்ட மசாலா படங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று நானும் தயாரிப்பாளர் விஜய் முடிவு செய்து எடுக்க ஆரம்பித்ததே மசாலா படம்“ என தொடங்கிய லக்ஷ்மன்.
“ படத்துல ஒவ்வொரு பிரதான கதாப்பாத்திரமும் மசாலா படங்களில் வரும் காதல், செண்டிமெண்ட் , ஆக்ஷன், காமெடி என ஒரு விஷயத்த சொல்லும். தனது நடிப்பில் குறும்புடன், நகைச்சுவையாய் இருக்கும் மிர்ச்சி சிவா காமெடிக்கும், வசனங்களில் தனது பிரத்தியேக உச்சரிப்பின் மூலம் கலக்கும் சிம்ஹாவிற்கு குறைவான வசனங்களுடன் ஆக்ஷன் பகுதிக்கும், பல வருடமாய் தமிழ் படங்களின் கதை கருவாய் உள்ள ‘காதல்’ பகுதியாக கௌரவ் மற்றும் குடும்பங்களை திரையரங்கிற்கு இட்டு வரும் ‘செண்டிமெண்டு’ பகுதிக்கு லக்ஷ்மி தேவி என இப்படி கதாப்பாதிரங்களை வடித்துள்ளோம்.”
“ ஜிகர்தண்டா, சூது கவ்வும் போன்ற படங்களை நியு ஏஜ் சினிமாக்கள் என்று குறிப்பிடுவார்கள். அத்தகைய நியு ஏஜ் சினிமாக்களின் பாணியில் மசாலாக்களை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளர் முதல் நடித்த நடிகர்கள் வரை அனைவரும் நண்பர்களே. படம் எடுத்ததே ஒரு டூர் போல் இருந்தது. அனைத்து மசாலா படங்களை போலவே எங்கள் படமும் ஃபேமிலி ஆடியன்சிற்கு காண்டுகளிக்க உகந்ததே” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
0 comments:
Post a Comment