↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த வருடம் பூஜை, ஆம்பள என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த நடிகர் விஷால் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் நிலையில் உள்ளார்.

ஏற்கனவே விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு' என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் விஷாலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இவர் விஷாலுடன் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரமாண்டமான வீட்டில் இன்று படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கேப்டன் விஜயகாந்த் நடித்த 'செந்தூரப்பூவே' என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த வீட்டில்தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜை படத்தை அடுத்து மீண்டும் விஷாலுடன் காமெடி கேரக்டரில் நடிக்க சூரி ஒப்பந்தமாகியிருக்கின்றார். டி.இமான் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், அந்தோணி எடிட்டிங்கும் செய்கின்றனர். இந்த படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top