↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைப்பது சரியாக இருக்காது. மாறாக 25 அணிகள் இருக்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் மேலும் வளர்ச்சி அடையும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் மட்டுமே இடம் பெறும் என்று ஐசிசி கூறியுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஐசிசியின் முடிவு சரியல்ல என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட்டை உலகளாவிய அளவுக்கு வளர்ச்சி பெறச் செய்ய உதவாது என்று அவர் கூறியுள்ளார். குட்டி அணிகளுக்கு அதிக அளவிலான போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்காமல் அவர்களை நீக்குவது நியாயமற்றது என்றும் சச்சின் கூறியுள்ளார்.
சிட்னியில் நடந்த ஒரு டின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சச்சின் பேசுகையில் கூறியதாவது:
10 அணிகள் போதும் என்ற முடிவை ஐசிசி மறு பரிசீலனை செய்ய வேண்டும். மாறாக 25 அணிகளை சேர்க்க முன்வர வேண்டும்.
அசோசியேட் அணிகளுடன் மோத பெரிய அணிகள் தங்களது ஏ அணிகளை தொடர்ச்சியாக அனுப்பி விளையாடச் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அனுபவம் கிடைத்து அவர்களும் சிறப்பான அணிகளாக மாற முடியும்.
ஒரு கிரிக்கெட் வீரராக, உலகக் கோப்பைப் போட்டிக்கான அணிகள் சுருங்குவதை பார்த்து நான் வருத்தப்படுவேன். மாறாக கிரிக்கெட் மேலும் வளர அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் சிறந்தது என்றார் சச்சின்.
தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அணிகளைத் தவிர மற்றவை சாதாரண கத்துக்குட்டி அணிகளாகும். ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து ஆகிய அந்த அணிகளை புரட்டி புரட்டி அடித்துத்தான் பெரிய அணிகள் உலக சாதனைகளைக் குவித்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கர் மேலும் கூறுகையில், சின்ன அணியாக இருந்தாலும் அவர்களும் சிறப்பாகவே ஆட முயற்சிக்கிறார்கள். ஏன் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தரத் தவறுவதில்லை. இதை நாம் ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் பார்த்து வருகிறோம். அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் அவர்களும் பெரிய அணியாக உருவெடுப்பார்கள். சச்சின் யோசனை மஞ்சுவாண்டுதான்...!
Home
»
sachin
»
sports
»
sports.tamil
»
worldcup
» யோசனை மஞ்சுவாண்டுதான்... சச்சின் சொல்றதைக் கேளுங்க!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment