↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 331 ரன்களை குவித்தது. 2வது பேட்டிங் செய்த ஜிம்பாப்வேயும் அசத்தலாக விரட்டி வந்தபோதிலும், 326 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் பி பிரிவில் உள்ள அணிகளான ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகியவை ஆஸ்திரேலியாவின், ஹோபர்ட் மைதானத்தில் இன்று பலப் பரிட்சை நடத்தின.
டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதைபயன்படுத்தி அயர்லாந்து 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணியின் எட் ஜாய்ஸ் அதிகபட்சமாக 112 ரன்கள் குவித்தார். ஆன்ட்ரி பால்பிர்னி 97 ரன்கள் எடுத்தார்.
இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே 74 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், அந்த அணி அசரவில்லை. அடித்து நொறுக்க ஆரம்பித்தது. அணியின் கேப்டன் பிரென்டன் டெய்லர் 121 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 96 ரன்களும் குவித்து அயர்லாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர். அணியின் ஸ்கோர் 223 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது.
இதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்களும் கணிசமாக ரன் அடிக்க, கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு, 7 ரன்கள் தேவைப்பட்டது, அயர்லாந்து வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. எனவே ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் சகப்வாவும், 3வது பந்தில் முபரிவாவும் அவுட் ஆக, 326க்கு ஜிம்பாப்வே ஆல் அவுட் ஆனது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகளில், 3ல் வெற்றி பெற்று குட்டியணியான அயர்லாந்து அசத்தியுள்ளது.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» கடைசி ஓவர் வரை பரபரப்பு... அயர்லாந்திடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment