விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி பண்ணி முன்னேறி கொண்டே இருக்கிறார் சூரி.
சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன்’ ஷூட்டிங்கில் இருந்த போது சூரியிடம் பேட்டி எடுத்தனர். அப்போது தளபதியோட நடிச்சிட்டிங்க எப்போ தலயோட நடிப்பீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘எனக்கு அஜித் அண்ணனை ரொம்ப பிடிக்கும். நான் அவரோட ரசிகன். என் தம்பி இன்னும் ஒருபடி மேல. அஜித்திற்கு ஊர்ல ரசிகர் மன்றமே வச்சவன்.
வீரம் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், அஜித்தை கலாய்க்க வேண்டியிருக்கும்னு ‘வேண்டாம்’னு சொல்லிட்டேன்ணே… அஜித் அண்ணனை கலாய்ச்சு அதுல நான் நடிச்சிருந்தேன்னா, எங்க வீட்டுக்குள்ளேயே வெட்டு குத்து ஆகிப்போயிருக்குமுண்ணே! என்று பதிலளித்தார்.’’
0 comments:
Post a Comment