தமிழில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளவர் சரிதா. மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாள படங்களில் நடித்த போது நடிகர் முகேசுக்கும், சரிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த 1988–ம் ஆண்டு சரிதாவும், முகேசும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து 2009–ம் ஆண்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் சரிதாவிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகர் முகேஷ் வழக்கு தொடர்ந்தார். நீண்டகால விசாரணைக்கு பிறகு கடந்த 2 வருடத்திற்கு முன்பு சென்னை குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது.
இதைத்தொடர்ந்து நடிகர் முகேஷ், மேதிலா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகை சரிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சி குடும்ப நல கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில் விவாகரத்து கேட்டு முகேஷ் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது தான் துபாயில் இருந்ததாகவும், இதனால் விசாரணைக்கு ஆஜராகக்கோரி கோர்ட்டு தனக்கு அனுப்பிய பல நோட்டீசுகள் தனக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தான் கோர்ட்டில் ஆஜராகாததால் அதை காரணம் காட்டி விவாகரத்து வழங்கப்பட்டு உள்ளது. எனவே இரு தரப்பு வாதத்தையும் கேட்காமல் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் முகேஷ் 2–வது திருமணம் செய்து உள்ளது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் சரிதா கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கொச்சி குடும்பநல கோர்ட்டு சரிதாவையும், முகேசையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அவர்கள் 2 பேரும் குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
விசாரணை நடந்த பிறகு சரிதா கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சரிதாவுடன் வந்த உறவினர்கள் அவரது மயக்கத்தை தெளியவைத்து காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

0 comments:
Post a Comment