↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் ஊனமுற்ற வாலிபருக்கு ஹோலியன்று அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் Vasant Kunj என்ற இடத்தில் உள்ள Keya என்ற உணவகத்திற்கு ஹோலி பண்டிகையான நேற்று தனது நண்பர்களுடன் நிபுன் மல்ஹோத்ரா என்பவர் சென்றுள்ளார்.
அப்போது நுழைவு வாயிலில் அவரை மறித்த 4 பாதுகாப்பு காவலர்கள், ஊனமுற்றவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நிபுன் மல்ஹோத்ரா ஊனமுற்றவர்களின் உரிமைகளுக்காக போராடும் சமூக ஆர்வலர் என்பதோடு Nipman Foundation என்ற அமைப்பின் துணை நிறுவனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயத்தை பதிவிட்டதால் இணையத்தில் இது காட்டுத்தீ போல பரவியுள்ளது. மேலும், ட்விட்டரில் #ShameonKeya என்ற ஹேஷ் டேக்கில் பொதுமக்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

பின்னர், இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட ஹொட்டல் நிர்வாகம், நாங்கள் ஊனமுற்றவர்களுக்கு நட்பாக சேவை கூடியவர்கள், தாங்கள் ஏற்கனவே எங்கள் உணவகத்தில் உணவருந்திய போது உங்களை நல்லமுறையில் கவனித்து கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும், இன்று ஹோலி பண்டிகை என்பதால் ஜோடிகளாக மட்டுமே உள்ளே அனுமதிக்க முடிவு செய்திருந்ததால் தான் உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top