மும்பையில் உள்ள பொது கழிவறைக்கு சென்ற பெண் உயிரோடு சமாதியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
மும்பை மான்கூர்டு, மகாராஷ்டிரா நகர் கோய்னா தெருவில் மாநகராட்சி பொது கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிப்பறையை ‘பஞ்சமுகி சமாஜிக் சேவா சன்ஸ்தா’ என்ற அமைப்பு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அங்குள்ள சாய்பாபா தெருவை சேர்ந்த கல்பனா பிம்பளே (40) என்ற பெண் காலை 6 மணிக்கு கழிப்பறையை சென்றுள்ளார். கழிப்பறைக்குள் உள்ளே சென்ற அவர் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இது வெளியில் வரிசையில் காத்திருந்த பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. கல்பானா பிம்பளேவுக்கு அடுத்தபடியாக கழிப்பறைக்கு செல்ல வரிசையில் நின்ற சிறுமி ஒருவள் கழிப்பறை கதவை கதவை தள்ளி பார்த்தாள். அப்போது, அங்கு கழிப்பறை கோப்பையை காணவில்லை. மேலும் கழிப்பறை கோப்பை உள்வாங்கி பெரிய அளவில் குழி ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் கல்பனா பிம்பளே கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சமாதி ஆனது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து கழிவுநீர் உறிஞ்சு லாரியின் மூலம் தொட்டியில் இருந்த தண்ணீர் உறிஞ்சப்பட்டது, அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் 20 அடி ஆழத்தில் கல்பனா பிம்பளே பிணமாக கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு படையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு கட்டி வெளியே மீட்டனர். பொது கழிப்பறையை முறையாக பராமரிக்கப்படாததே கல்பனா பிம்பளே பலியானதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. |
கழிப்பறைக்கு சென்ற பெண் உயிரோடு சமாதி: சோக சம்பவம்
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment