↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் திரைப்பட விருது விழாவில் முதன்முறையாக உலக திரைப்படங்கள் - முழு விபரம் - Cineulagam
தமிழ் திரைப்பட விருது விழா கடந்த 6 வருடங்களாக வெற்றிகரமாக நோர்வேயில் நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த வருடம் 6வது திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது.
கடந்த 5 வருடங்களாக தமிழ் மொழியில் வெளிவந்த முழு நீளப்படம், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசைப்பாடல் காணொளி, அனிமேஷன் ஆகியவற்றோடு 30 வகையான பிரிவுகளில் தொடர்ந்து தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஓர் புதிய பிரிவாக உலக நாடுகளின் சினிமாவுக்கான குறும்படம், ஆவணப்படம், முழு நீளப்படம் ஆகியவற்றிற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டு சிறப்பு திரையிடலாக, சீனாவின் VINCENT என்னும் குறும்படமும், TAKAO DANCER என்னும் முழு நீளப்படமும், சரஜெவோவின் FINDING FAMILY என்னும் ஆவணப்படமும், ரஷ்யாவின் MY GURU என்னும் ஆவணப்படமும், டென்மார்க்கின் INLUSIO என்னும் குறும்படமும் திரையிடவிருக்கிறது.

தேர்வு செய்யப்பட்ட படங்களின் விவரங்கள்:

NTFF 2015 முழுநீளத் திரைப்படங்கள் - தமிழ்நாட்டில் இருந்து தெரிவானவை:
  1. சிகரம் தொடு - இயக்குனர் கௌரவ்
  2. ஜிகர்தண்டா - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
  3. கயல் - இயக்குனர் பிரபு சாலமன்
  4. குக்கூ - இயக்குனர் ராஜு முருகன்
  5. கதை திரைக்கதை வசனம் இயக்கம் - இயக்குனர் ரா.பார்த்தீபன்
  6. ராமானுஜன் - இயக்குனர் ஞானசேகரன்
  7. நான் தான் பாலா - இயக்குனர் ர.கண்ணன்
  8. தேன்கூடு - இயக்குனர் இகோர்
  9. காவிய தலைவன் - இயக்குனர் வசந்தபாலன்
  10. தெகிடி - இயக்குனர் பி.ரமேஷ்
  11. காடு - இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்
  12. குற்றம் கடிதல் - இயக்குனர் பிரம்ம.ஜி
முழுநீளத் திரைப்படங்கள் - உலக தமிழ் சினிமா (புலம்பெயர் தேசம்)​:
  1. ஒஸ்லோ (நோர்வே) - இயக்குனர் ஸ்டீபன்
  2. உயிர்வரை இனித்தாய்(டென்மார்க்) - கே.எஸ்.துரை
  3. சிவ சேனை (லண்டன்) - என். ராதா
குறும்படம்/ஆவணப் படம்/முழுநீளத் திரைப்படம் - உலக சினிமா அனைத்து மொழி:
  1. வின்சென்ட் - (குறும்படம் - சீனா ) -இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
  2. ஆவணப்படம் - பொஸ்னியா - இயக்குனர் ச்ரிஸ் லெஸ்லி
  3. மை குரு - (ஆவணப்படம் - ரஷ்யா ) - விக்டர் க்ரிபேர்மன்
  4. டகோ டான்சர் - (முழுநீளத் திரைப்படம் - சீனா இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
  5. இன்லுசியோ - (குறும்படம் - டென்மார்க்) - வில்லியம் ருட்பெக் லிந்தர்ட்ட்

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top