↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத், த்ரிஷா, லட்சுமிராய் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை புரிந்தது என்பது அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம். இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கோலிவுட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் மங்காத்தா படத்தினை இந்தியில் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டால் இந்நிறுவனம் தயாரிக்கவிருக்கும் முதல் இந்தி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், அர்ஜூன், த்ரிஷா நடித்த கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அஜீத் நடித்த விநாயக் மகாதேவன் என்ற அற்புதமான கேரக்டரில் நடிக்கவிருக்கும் பாலிவுட் நடிகர் குறித்து தெரிந்து கொள்ள அஜீத் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top