↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யுவராஜ்சிங் நல்ல வீரர்தான், ஆனால் அவரது இடத்தில் சுரேஷ் ரெய்னா தற்போது சிறப்பாகவே ஆடி வருகிறார் என்று கூறினார் இந்திய அணி கேப்டன் டோணி. உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர், யுவராஜ்சிங் சேர்க்கப்படாதது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. யுவராஜ்சிங்கை அணியில் சேர்க்காமல் விட்டதற்கு, கேப்டன், டோணிதான் காரணம் என்று, யுவராஜ்சிங் தந்தை வெளிப்படையாக தெரிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், 5வது வரிசையில் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, சரிவர பேட்டிங் செய்யாமல், கொஞ்ச ரன்களிலேயே அவுட் ஆவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த இடத்தில் யுவராஜ்சிங்தான் பொருத்தமாக இருந்தார் என்றும் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அதிலும், நேற்றைய முக்கியமான ஆட்டத்தில் 22 ரன்களில் ரெய்னா அவுட் ஆனது அவருக்கு எதிரான கருத்துகளுக்கு வலு சேர்க்கிறது.
இதுபற்றி டோணியிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது: உலகின் பல்வேறு வீரர்களும் ஷாட் பிட்ச் பந்தில் அவுட் ஆகிவருகின்றனர். ஆனால், ஏதோ, ரெய்னா மட்டுமே அப்படி அவுட் ஆவதைப்போல மீடியாக்கள்தான் கிளப்பிவிடுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றை திரும்பி பார்த்தால் ஒரு விஷயம் புரியும். 5வது வீரராக களமிறங்கியவர்களில் பெரும்பாலானோர் சோபிக்க முடியாமலே போயுள்ளனர். அந்த வகையில் யுவராஜ்சிங், சிறப்பான வீரராக செயல்பட்டார்.
இப்போது யுவராஜ்சிங் இடத்தில், ரெய்னா சிறப்பாக ஆடி வருகிறார். இதற்கு முன்பு விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா போன்றோரும் ஐந்தாவதாக களமிறங்கியுள்ளனர். ஆனால் அவர்களால் சிறப்பாக ஆட முடியவில்லை. எனவே 5வது வீரராக சிறப்பாக ஆடிவரும் ரெய்னாவின் தன்னம்பிக்கையை யாரும் குலைத்துவிடக் கூடாது.
40வது ஓவர்களுக்கு மேல் களமிறங்கும் பேட்ஸ்மேனால் அதிக ரன்களை குவிப்பது இயலாத காரியம். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடிப்பது மட்டுமே அப்போது அவர்களின் வேலையாக இருக்கும். அப்படி அடித்து 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆனால், அந்த பேட்மேனை பார்த்து ஃபார்மில் இல்லை என்று கூறிவிட முடியாது.
சுயநலமாக கடைசிவரை அவுட் ஆகாமல் நின்று கொண்டிருக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேவையில்லை. அணிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு அவுட் ஆனாலும் பரவாயில்லை. தற்போதைய காலமாற்றத்தில், எத்தனை ரன்கள் அடித்தாலும் அது போதாமல் போய்விடுகிறது. 300 ரன்கள் அடிக்கும் நிலையிருந்தால், கூடுதலாக ஐந்து ரன்களாவது அடிக்கவே நாங்கள் முயற்சி செய்கிறோம். இவ்வாறு டோணி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment