↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மறுபடியும் ஒரு வில்லேஜ் கதையா? இப்போதைக்கு வேணாம்… என்று தள்ளி தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த கார்த்தி, அந்த விரதத்தை ஒழித்தே விட்டார். அதற்கப்புறம் வந்ததுதான் இந்த ‘கொம்பன்’. ஏன் வில்லேஜ் கதைன்னா கசக்குதா? அதெல்லாம் இல்லையாம். அப்புறம்? அதை அவர் வாயாலேயே கேட்ருவோம்…
பருத்தி வீரன் படத்திற்கு பிறகு வில்லேஜ் கதையில் நடிச்சா பருத்தி வீரனையே ரிப்பீட் பண்ணியிருக்கான்னு சொல்வாங்க. அப்படியே வேற மாதிரி நடிச்சோம்னு வைங்க. என்ன இருந்தாலும் பருத்தி வீரன் மாதிரி இல்லேன்னு சொல்வாங்க. இந்த பிரச்சனைக்காகதான் நான் இப்படியொரு கதையே வேணாம்னு இருந்தேன். ஆனால் முத்தையா இந்த கதையை சொன்னப்போ, ஏன் நடிச்சா என்னன்னு தோணுச்சு. ஒவ்வொரு ஷாட்லயும் நடிச்சு முடிச்சுட்டு அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்கிட்ட, பருத்திவீரன் சாயல் இல்லல்ல…? ன்னு கேட்டுகிட்டேயிருந்தேன். அவங்க இல்லேன்னு சொன்னாலும் நம்பாம திரும்ப திரும்ப அவங்களை கேட்டு தொல்லை பண்ணியிருக்கேன் என்றார் கார்த்தி.
எங்க அப்பா எங்க தாத்தாகிட்ட எப்படி நடந்துப்பார்னு பார்த்திருக்கேன். அந்த கதையைதான் அப்படியே கொம்பன்ல சொல்லியிருக்கேன். தமிழ்ல அப்பா மகன், அப்பா மகள்னு நிறைய கதைகள் வந்திருக்கு. ஆனால் மாமனார் மருமகன் கதை வந்ததில்ல. பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த கதையை உருவாக்கிட்டேன். இருந்தாலும் ராஜ்கிரண் சார் நடிக்கிறேன்னு சொன்னால்தான் இந்த படத்தையே கையில் எடுக்கணும்னு நினைச்சேன். சத்யராஜ் சாரை வச்சு எடுக்கலாம்னு சொன்னவங்ககிட்ட கூட, இல்லயில்ல. ராஜ்கிரண்தான் வேணும்னு ஒத்த கால்ல நின்னுருக்கேன். அப்படியே அந்த மாமனாராகவே வாழ்ந்திருக்காரு என்றார் டைரக்டர் முத்தையா.
பொண்ணை பெத்த அத்தனை அப்பன்களும், தன் மகளை இன்னொருத்தருக்கு கைய புடிச்சு கொடுக்கிற கவலை வந்துரும். அப்படியே அவன் நல்லபடியா பொண்ணை வச்சுருந்தாலும், நல்லாயிருக்காளோ இல்லையோங்கிற கவலை வாட்டிகிட்டேயிருக்கும். அவளுக்கு ஒரு பொண்ணு பிறந்து அவளுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் கூட இந்த கவலை எல்லா அப்பன் மனசையும் வாட்டிகிட்டேயிருக்கும் என்று உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருந்தார் ராஜ்கிரண்.
கல்யாணத்துக்கு பிறகு ரொமான்ஸ் சொன்ன படங்கள் கம்மி. இந்த படத்தில் எனக்கும் லட்சுமிமேனனுக்கும் கல்யாணம் ஆன பிறகும் சின்ன சின்ன ரொமான்ஸ் இருக்கும். அதை ரொம்ப ரசிச்சேன் என்றார் கார்த்தி.
இந்த படம் எங்க சாதி வரை முறைகளை பற்றியது. படத்திற்கு தடை விதிக்கணும் என்று ஒரு அமைப்பு வழக்கு மன்றத்திற்கு போயிருக்கிறது. எல்லாவற்றுக்குமான பதிலாக சொன்னார் கருணாஸ். இது காலம் காலமாக நடந்து வர்ற வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதை. இத மற்றவங்க நல்லா புரிஞ்சுக்கணும் என்றார் அழுத்தம் திருத்தமாக. அவரு சொன்னாலாவது கேட்டுப்பாங்களா? அது தெரியலையே!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top