‘ஆரோகணம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஜெய் குஹைனி. இவர் தற்போது புதுமுக இயக்குனர் சந்திய மூர்த்தி இயக்கும் சி.எஸ்.கே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய பெயர்களின் முதல் எழுத்தையே படத்தின் பெயராக வைத்துள்ளனர். இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படம் மார்ச் 13ம் தேதி வைப்ரன்ட் மூவீஸ் மூலம் வெளியிடவுள்ளனர்.
பி.எஸ்சி. பிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி சி.எஸ்.கே. படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை கூறும்போது, சி.எஸ்.கே படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.
200 லிட்டர் தண்ணீர் இருக்கும் டேங்கில் கைகால் கட்டி முங்க விட்டது, கையை கட்டி இரண்டு மாடிகள் தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோவுக்கு நிகராக காட்சிகள் இருந்தது. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடித்ததில் உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாராயண் ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும். அப்படி அறையும் பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்து விட்டேன்.
சி.எஸ்.கே படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடு நாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.” என்றார்.

0 comments:
Post a Comment