↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

புயலே வீசினாலும் கூல் ஆக எதிர்கொள்பவர் நம் இந்திய அணியின் கேப்டன் டோணி. ஆனால் கிறிஸ் கெய்ல் அடித்து ஆட ஆரம்பித்து விட்டால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கிரார். உலகக்கோப்பை போட்டியில் இன்று மேற்கு இந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது இந்திய அணி. எதிரணியில் கிறிஸ் கெய்ல் என்ற புயல் விளையாடுகிறது. அந்த புயல் நாளை மையம் கொண்டு எந்தப்பக்கம் கரையை கடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அல்லது வலுவிழந்து போகுமா? என்பதையும் எதிர்பார்க்க முடியாது. இதையேதான் நமது கேப்டன் டோணியும் கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மெக்கல்லம் போன்ற அதிரடி வீரர்கள் அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டால் கேப்டனோ, பவுலரோ ஒன்றும் செய்வதற்கில்லை என்கிறார் டோணி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்சை நெருக்கி 2-வது ரன் ஓட வைத்து ரன் அவுட் செய்தது இந்தியா, ஆனால் நாளை வெள்ளிக்கிழமையன்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு இன்னொரு பெரிய தலைவலி காத்திருக்கிறது அவர்தான் கிறிஸ் கெய்ல்.

கெய்லுக்கு எதிராக எதுவும் முன் திட்டம் உள்ளதா என்று டோணியிடம் கேட்ட போது, சிறந்த திட்டம் என்னவெனில் எதுவும் திட்டமிடாமல் இருப்பதே என்று கூறியுள்ளார்.

திறந்த மனதுடன் கூறினால்...இவர்கள் ஆடத் தொடங்கி சிக்சர்கள் அடிக்கத் தொடங்கினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே. சிக்சருக்கு வியூகம் அமைக்க இயலாது.


ஏதாவது முன் திட்டமிட்டால் அதில் நாம் தோற்றுத்தான் போவோம். உதாரணமாக ஷார்ட் பிட்ச் வீசலாம் என்று தீர்மானித்தால் அத்தனை ஷார்ட் பிட்சும் பவுண்டரி போக ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட பேட்ஸ்மென்களை ஏமாற்றிப் பார்க்கலாம். இதன் மூலம் பவுலர்கள் வித்தியாசமாக ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதைத் தவிர இதைச் செய்தால் இது நடக்கும் என்றவாறான நிலையான திட்டம் அவர்களுக்கு எதிராக செய்ய முடியாது.

இங்குதான் பந்துவீச்சாளர்கள் ஒரு கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம். பீல்டர்களும் அவருக்கு உதவி புரியவேண்டும். ஒரு அரை வாய்ப்பு கிடைத்தால் கூட அவர்களை வீழ்த்த முனைப்பு காட்ட வேண்டும். அதாவது ஒரு வேட்டைக்குழு போல ஒன்றாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்." என்று கூறியுள்ளார் டோணி.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top