அப்போது கூறியதாவது, இசையமைப்பது மற்றும் கதை எழுவது போன்ற வேலைகளுக்கும் வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கதாநாயகியாக இருப்பது கொஞ்ச காலம் தான். ஆனால் நாயகர்களுக்கு அப்படியில்லை. அவர்கள் நீண்ட நாட்கள் நாயகனாக வலம் வருகிறார். எனவே சினிமாவில் எனக்கு மார்க்கெட் இருக்கும் வரை நடிப்பதில் தான் முக்கியத்துவம் கொடுப்பேன்.
நாயகியாக இருப்பதற்கு கூட நிறைய பேர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மேக்கப்மேன், உடை அலங்கார நிபுணர் உள்ளிட்டோர் நாயகியை அழகுபடுத்துகிறார்கள். கேமராமேன் திரையில் அழகாக காண்பிக்கிறார்.
ஆனால் எழுதுவதற்கு பேப்பரும் பேனாவும், மூளையும் இருந்தால் போதும் எழுதிவிடலாம். இசை ஆர்வம் இருந்தால் டியூன் போட்டு பாடலும் எழுதிவிடலாம். ஐம்பது வயதில் கூட எழுதலாம் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment