இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் கடந்த புதன்கிழமையன்று நியூகேசில் நகரில் உள்ள ஜேம்ஸ் பார்க் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் நியூகேசில் யுனைடெட் அணி மோதியது.
முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயின் போது, மான்செஸ்டர் யுனைடெட் வீரர் ஈவான்ஸ், நியூகேசில் வீரர் பெப்பிஸ் சிஸ்சேயிடம் இருந்து பந்தை கைப்பற்ற முயற்சித்தார்.
அப்போது இரு வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஒருவர் மீது ஒருவர் எச்சில் துப்பிக்கொண்டனர்.
மைதானத்தில் எச்சில் துப்பி விளையாடிய இவர்களை பார்த்து கூடியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து பெப்பிஸ் சிஸ்சே சிவப்பு அட்டை காட்டப்பட்டு களத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஏப்.ஏ. 3 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது.
இதில் மான்செஸ்டர் யுனைடெட்டின் அயர்லாந்து ஸ்டிரைக்கர் ஈவான்ஸ் மீது முதலில் பெப்பிஸ் சிஸ்சே மீது எச்சில் துப்பியுள்ளார்.
தான் செய்த தவறை உணர்ந்து சிஸ்சே மன்னிப்பு கேட்டதையடுத்து அவருக்கு 7 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஈவான்சுக்கும் 6 முதல் 7 போட்டிகள் வரை தடை விதிக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஈவான்சுக்கு அளிக்கப்படும் தண்டனை விபரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
0 comments:
Post a Comment