டார்லிங் படத்தில் நடித்தவர் நிக்கி கல்ரானி. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்த சஞ்சனா கல்ரானியின் சகோதரி. தமிழில் ஒரு படத்துடன் ஓரம்கட்டப்பட்ட சஞ்சனா கன்னட தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நிலைக்க முடியுமா என்றதற்கு பதில் அளித்தார் நிக்கி கல்ரானி.அவர் கூறும்போது, ‘தெலுங்கில் ஹிட் ஆன மரியாத ராமன்னா படத்தின் மலையாள ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறேன். என்னையும் சகோதரி சஞ்சனாவைவும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். இதற்கு பதில் சொல்லி டயர்டு ஆகிவிட்டேன். சஞ்சனாவுடன் நான் ரொம்பவும் பாசமாக இருப்பேன்.
5 வருடத்துக்கு முன்பே அவருடைய பெயரை என் தோள் மீது பச்சை குத்தி வைத்திருக்கிறேன். எங்களுக்குள் எந்த போட்டியும் கிடையாது. இருவரில் யார் கவர்ச்சியானவர்கள் என்று கேட்கின்றனர். உண்மையிலேயே எனது அக்காதான் ரொம்பவும் கவர்ச்சியானவர். ஆனால் வெளியில் செல்லும்போதோ, ஷாப்பிங் போகும்போதோ எந்த டிசைனில் உடை அணியலாம் என்று என்னிடம் ஆலோசனை கேட்பார்.
ஏனென்றால் நான் பேஷன் டிசைன் பட்டப்படிப்பு படித்திருக்கிறேன். உடை விஷயத்தில்தான் எங்கள் இருவருக்கும் இடையே போட்டி இருக்கும். சினிமாவில் நிலைக்க முடியுமா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதை கதாபாத்திரங்கள்தான் தீர்மானிக்கின்றன’ என்றார்.
0 comments:
Post a Comment