↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

'என்னை அறிந்தால்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி மற்றும் 'குட்டித்தல' யின் வரவு, ஆகியவற்றினால் இரட்டை மகிழ்ச்சியில் இருக்கும் அஜீத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் 'என்னை அறிந்தால்' படத்தை சமீபத்தில் பார்த்த காமெடி நடிகை வித்யூலேகா, அஜீத்தின் நடிப்பை பாராட்டி வாழ்த்து ஒன்றை அனுப்பினார். இந்த வாழ்த்துக்கு சில நாட்கள் கழித்து நன்றி கூறி பதில் அனுப்பியுள்ள அஜீத், தன்னுடைய தாமதத்திற்கு நடிகை வித்யூலேகாவிடம் வருத்தம் தெரிவித்தும் இருந்தார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து வித்யூலேகா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'என்னுடைய வாழ்த்துக்கு நன்றி கூறி பதில் அனுப்பியுள்ள 'தல' தாமதத்திற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார். என்ன ஒரு நடிகர்? எனக்கு தெரிந்து ஈகோ இல்லாத ஒரே நடிகர் தல அஜீத் ஒருவரே. அவரிடம் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே வித்யூலேகா, அஜீத்தின் 'வீரம்' படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top