↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் மிக சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் மேற்கிந்திய தீவுகள் அணி கெய்ல் உட்பட 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ரன்களை எடுக்க முடியாமல் பரிதாபமான நிலையில் தவித்து வருகிறது.
19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்களையே மேற்கிந்திய தீவுகள் அணியால் எடுக்க முடிந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவை 130 ரன் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோற்கடித்தது.
இந்திய அணி இன்றைய 4-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் செய்து வென்ற இந்திய அணி பலவீனமான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக 2-வது ‘பேட்டிங்' செய்தது. இந்திய அணியின் 4-வது தொடர் வெற்றிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ்கெய்ல் மிகப்பெரிய சவாலாக இருப்பார். ஜிம்பாப்வேக்கு எதிராக இரட்டை சதம் அடித்த அவரை கட்டுப்படுத்துவது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் சவால்தான். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, மொகித் சர்மாவும், சுழற்பந்தில் அஸ்வினும் நல்ல நிலையில் உள்ளனர்.
கிறிஸ்கெய்லை வீழ்த்த வியூகம் அமைத்தால் மட்டுமே அவரது ரன் குவிப்பை தடுக்க இயலும். இதற்காக கேப்டன் டோணி புதிய முயற்சியை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை புது பொலிவுடன் உள்ளது. கோஹ்லி, ஷிகார் தவான், ரகானே ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல ரெய்னா, ரோகித்சர்மா, கேப்டன் டோணி ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளை மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. அயர்லாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. 4 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி இந்தியாவை வீழ்த்த அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும். கிறிஸ்கெய்ல் அந்த அணியின் துருப்புசீட்டாக உள்ளார். அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தால் கட்டுப்படுத்த இயலாது. மீண்டும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தில் கெய்ல் இருக்கிறார். இதுதவிர சாமுவேல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், டாரன்சேமி, ரஸ்சல் டெய்லர் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டத்தில் இந்தியா 3-ல் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு போட்டியில் வெற்றி கிடைத்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தர்மசாலாவில் மோதிய ஆட்டத்தில் இந்தியா 59 ரன்னில் வெற்றி பெற்றது. பெர்த் மைதானத்தில் இரு அணிகளும் ஒரே ஒரு முறை மோதியுள்ளன. 1991-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடந்த இந்த ஆட்டம் ‘டை'யில் முடிந்தது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து இந்தியாவை பந்து வீச கேட்டுக் கொண்டது.
Home
»
»Unlabelled
» இந்தியாவைத் தாக்க வந்த கெய்ல் புயல் வலுவிழந்து 21 ரன்களில் கரை ஒதுங்கியது.. 5 விக்கெட் காலி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment