அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி என தொடர் தோல்விக்கு பிறகு மெட்ராஸ் படத்தின் மூலம் மீண்டும் விட்ட மார்கெட்டை பிடித்தார் கார்த்தி.
விரைவில் அவருடைய நடிப்பில் ’கொம்பன்’ படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் மூலம் மீண்டும் பிடித்த மார்க்கெட்டை உயர்த்துவாரா..? இல்லை சறுக்குவாரா..? என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கிடா மீசை, கருப்பு சட்டை, லுங்கி, திமிரான நடை, ஏளனமான பேச்சு என கொம்பன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அசத்துகிறார் கார்த்தி. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கிரமாத்து சப்ஜெட்டில் இறங்கியிருக்கிறார். இப்படத்தை குட்டிபுலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கிறார். லட்சுமிமேனன் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது உதவி இயக்குநர்களை ரொம்பவே டார்ச்சர் செய்தாராம் கார்த்தி. அதை சொன்னதே அவர்தான். “இந்தப் படத்துல மீண்டும் கிராமத்துக் கதாபாத்திரம்னு சொன்ன உடனே கொஞ்சம் யோசிச்சேன். இருந்தாலும் அருமையான கதை. படத்தோட படப்பிடிப்பு ஆரம்பிச்சதுமே ஒவ்வொரு நாளும் உதவி இயக்குநர்களை ரொம்பவே டார்ச்சர் பண்ணினேன்.
ஒவ்வொரு காட்சி நடிச்ச பிறகும், உதவி இயக்குநர்கள் கிட்ட, ஏம்பா, ‘பருத்தி வீரன்’ மாதிரி எங்கயாவது நடிச்சிருந்தன்னானு அவங்ககிட்ட கேட்டு தொந்தரவு பண்ணுவேன். அவங்க அப்படி எதுவும் தெரியலைன்னு சொன்ன பிறகுதான் அமைதியாவேன். அந்த அளவுக்கு ஒரு பயம் இருந்துச்சி,” என்கிறார் கார்த்தி.
0 comments:
Post a Comment