↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று பலமான அணியாக வலம் வருகிறது. இந்நிலையில், வரும் 6ம் தேதி பெர்த்தில் நடக்கவுள்ள பி பிரிவு லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இது குறித்த சமி கூறியதாவது :

இந்திய அணி பலமானது. அதே நேரம், எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கனவுடன் உள்ளோம். எனவே, பெர்த்தில் நடக்கவுள்ள போட்டியில் எங்களை வீழ்த்துவது கடினம். இந்திய வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடட்டும். ஆனால், நாங்கள்தான் வெற்றியை கொண்டாடுகிறோம். இவ்வாறு சமி கூறினார்.

இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் (மார்ச் 6) அன்று, நடக்கவுள்ள போட்டியில் சமியின் பேச்சுக்கு, இந்திய வீரர்களின் பதிலடி என்னவென்று தெரியும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top