அந்த மியூசியத்தில் ரொனால்டோ வாங்கிய விருதுகள், அவர் பயன்படுத்திய காலணிகள், கால்பந்துகள், ஜெர்சிகள் உள்ளிட்ட பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியத்தில் அச்சு அசல் போன்ற ரொனால்டோவின் மெழுகு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் ரொனால்டோவின் ஊன்றப்பட்டுள்ள தலை முடி இயற்கையானது.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ரொனால்டோ எப்போதெல்லாம் தனது ஹேர் ஸ்டைலை மாற்றுகிறாரோ அதே போலவை அவரது மெழுகு சிலைக்கும் முடி வெட்டப்படும். ரொனால்டோவுக்கு சிகை அலங்காரம் செய்யும் கலைஞரே அந்த சிலைக்கும் 45 நாட்களுக்கு ஒரு முறை வந்து சிகைதிருத்தம் செய்கிறார்.
இது குறித்து அந்த மியூசியத்தின் இயக்குநர் கூறுகையில்,
'ரொனால்டோ தன்னைப் போலவே தனது மெழுகுசிலையும் இருப்பதையே விரும்புகிறார். அதனால்தான் இவ்வளவு அக்கறை செலுத்துகிறார்' என்றார்.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னதாக போர்ச்சுகல் நாட்டில் உள்ள ரொனால்டோவின் சொந்த ஊரான ஃபன்சால் என்ற நகரத்தில் ரொனால்டோவின் மியூசியம் திறக்கப்பட்டது.
கடந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னதாக போர்ச்சுகல் நாட்டில் உள்ள ரொனால்டோவின் சொந்த ஊரான ஃபன்சால் என்ற நகரத்தில் ரொனால்டோவின் மியூசியம் திறக்கப்பட்டது.
இந்த மியூசியத்தை பார்வையிட 5 யூரோ கட்டணமாக வசூலிக்கப்பட்டு அனாதை குழந்தைகள் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் ரொனால்டோவின் மியூசியத்தை பார்வையிடுகின்றனர்.
0 comments:
Post a Comment