அப்படியெல்லாம் நடக்கும்னு தெரியும். ஆனாலும், ஆன வரைக்கும் வசூல், அள்ளிய வரைக்கும் மகசூல்னு ஆட்டைய போடுற ‘ஏற்பாட்டாளர்கள்’, உலகம் முழுக்க இருப்பதால் இந்த உள்ளுர் கலவரம் பற்றி என்னத்தைசொல்றது?
வட, தென் மாவட்டங்களில் அவ்வப்போது முளைக்கும் போஸ்டர்களில் நமீதா சிரித்துக் கொண்டிருப்பார். பிந்து மாதவி, காதல் சந்தியா என்று சிலரது புகைப்படங்கள் இருக்கும். மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர் என்று இவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் அச்சிட்டிருப்பார்கள். அன்றிரவு நடக்கும் கலைநிகழ்ச்சிக்கு இவ்ளோ துட்டு என்று கலெக்ஷன் தூள் பறக்கும். சம்பந்தப்பட்ட நடிகைகளை நேரில் பார்க்க வேண்டும் என்று உண்டியலை உடைத்து காசை கொண்டு வந்து கொட்டியிருப்பார்கள் ரசிகர்கள். கடைசியில் பார்த்தால்… நமீதா என்ன? அவரது துப்பட்டா கூட அங்கு வந்திருக்காது. அதற்கப்புறம் கலவரம் கல்வீச்சு என்று அந்த ஏரியா அமர்க்களப்படும். வசூல் பார்ட்டிகள் ஓடி ஒளிந்திருப்பார்கள்.
இப்படிதான் கடந்த வாரம் யுவன் சங்கர் ராஜாவால் பெரிய களேபரம். ஏரியா – திருநெல்வேலியின் மையப்பகுதி. இசை சக்கரவர்த்தி யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இன்னிசை விருந்து என்று நோட்டீஸ் அடித்து பெருமளவு வசூலும் பண்ணிவிட்டார்கள். கடைசியில் யுவன் வரவில்லை. இதற்கு மூன்று முறை இதே நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். கடைசி கடைசியாக நிகழ்ச்சியை ரத்து செய்யாமல் பார்வையாளர்களை உள்ளே அனுமதித்த ஏற்பாட்டாளர்கள். இது யுவனின் கச்சேரிதான். ஆனால் அவர் மட்டும் வரல… என்று சால்ஜாப்பு சொல்ல, வெளுத்து மேய்ந்துவிட்டார்கள் ரசிகர்கள். கொடுத்த காசுக்கு ரெண்டு ட்யூப் லைட்டை உடைச்சதுதான் மிச்சம் என்று அவர்கள் கிளம்ப, ட்யூப் லைட், சேர், பந்தக்கால் போக, மிச்சமெல்லாம் லாபம் என்று கிளம்பியதாம் ஏற்பாட்டாளர்கள் குழு.
இதெல்லாம் சென்னையிலிருக்கும் யுவனுக்கு தெரியுமா? அதுதான் டவுட்டோ டவுட்!
0 comments:
Post a Comment