↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


தமிழில் கடந்த பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கி வரும் நயன்தாரா, சிம்புவுடன் நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'மயூரி'யும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. முதலில் நைட் ஷோ' என்றும் பின்னர் 'மாயா' என்றும் கூறப்பட்ட இந்த படத்தின் டைட்டில் தற்போது 'மயூரி' என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த த்ரில் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். நெடுஞ்சாலை' பட ஹீரோ ஆரி நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, இருவேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா மற்றும் ஒரு குழந்தை ஆகிய இரு கேரக்டர்களை முன்னிலைப்படுத்தியே இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

சி.கல்யாண் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சத்யா ஒளிப்பதிவாளராகவும், டி.எஸ்.சுரேஷ் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தில் கருணாஸ் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
ஏற்கனவே சூர்யாவுடன் நயன்தாரா நடித்த 'மாஸ்' திரைப்படமும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், நயன்தாராவின் மாஸ், மயூரி, இது நம்ம ஆளு ஆகிய மூன்று திரைப்படங்கள் கோடை விடுமுறையில் ரசிகர்களை குளிர்விக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top